தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் மாஸ்கோவில் நடைபெறும் படத்தின் ஷூட்டிங் வீடியோவை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் செம டிரெண்டிங்கில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Archana Kalpathi (@archanakalpathi)