நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய -மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மற்ற சேமிப்பு திட்டங்களை விட இத்திட்டத்தில் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.

மத்திய அரசை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் ஷாகுன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் குறிக்கோள் திருமணத்துக்கு நிதியுதவி அளிப்பதாகும். ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் கீழ் 21,000 நிதி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. சென்ற 2021-ம் வருடம் நிதி உதவித் தொகை 51,000 ஆக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் ஆன்லைன் (அ) ஆப்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.