
தமிழக அரசானது பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவரிசையில் பெண்களுடைய பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்காக பதிவு கட்டணம் ஆனது ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 10 லட்சம் வரை வீடு, மனை, விலை நிலம் போன்ற அசையா சொத்துக்கள் பெண்களுடைய பெயரில் வாங்கினால் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்படும் பத்திர பதிவுகளில் 75 சதவீதம் பதிவுகள் இந்த அறிவிப்பால் பயன் பெற முடியும்.
சமீபத்திய பட்ஜெட் கூட்டல் தொடரின் போது பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் 10 லட்சம் மதிப்புக்குள்ளான சொத்துக்கள் மற்றும் வீட்டுமனை போன்றவைகளுக்கு ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு, நிலம் போன்ற அசையா சத்துக்கள் போன்றவை பெண்கள் வாங்கினால் அவர்களுக்கு ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைக்கப்படும். இந்த முறையானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.