சமீபகாலமாகவே விலைவாசி உயர்வு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பெட்ரோல், டீசல் ஒருபுறம் விலை உயர்வு இருந்தாலும் மறுபுறம் அதற்கு போட்டியாக சிலிண்டர் விளையும் கிடுகிடு என உயர்ந்துள்ளது. இருப்பின்னும் கடந்த சில மாதங்களில் சமையல் சிலிண்டர் விலை கணிசமாக குறைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்த விலைக்கு சிலிண்டர் வாங்குவதன் மூலமாக பணத்தை மிச்சப்படுத்துவதற்கு ஏராளமான வழிகள் உள்ளது.

சிலிண்டர்களின் விலை நகரத்திற்கு நகரம் மாறுபடும். lpg சிலிண்டர் விலை 940 வரை உள்ளது. ஆனால் 300 ரூபாய் குறைவாக சிலிண்டர் வாங்க முடியும் எப்படி என்றால், எல்பிஜி சிலிண்டர் விலை குறைவால் மக்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் சிலிண்டர் விலை 200 குறைக்கப்பட்டது. அது தவிர தனி மாயானியமாக 100 ரூபாய் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி தற்போது 300 ரூபாய் மானியம் வழங்கும் பணி நடந்து வருகிறது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது. 300 ரூபாய் மானியம் போக வெறும் 640க்கு சிலிண்டரை வாங்கலாம். எனவே இந்த வாய்ப்பை தவறவிடாமல் குறைந்த விலைக்கு சிலிண்டர் வாங்கி பயன்படுத்தலாம்.