பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த்மான். இவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்த திருமண நிச்சயதார்த்த விழாவின்போது பஞ்சாப் முதல்வர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

 

அவர் ஒரு பஞ்சாபி பாடலுக்கு மிகவும் உற்சாகமாக நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இதே போன்று அரவிந்த் கெஜ்ரிவால் புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற சாமி பாடலுக்கு தன் மனைவியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.