
மத்திய மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயப்படுத்தி வருகிறது. அந்தவகையில் சிறு வணிகர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசு பிரதம மந்திரி ஸ்வாநிதிஎன்ற திட்டத்தை (பிஎம் எஸ்விநிதி) செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலமாக சிறு வணிகர்கள் ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் 7% செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்திற்கு https://pmsvanidhi.mohua.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு தேவை.