
விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக அதிகரித்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விசைத்தறிக்கு மூன்று நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்யப்பட்டு ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்கனவே இலவச மின்சாரம் 700 யூனிட் ஆக இருந்த நிலையில் இது போதவில்லை என்று நெசவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தற்போது அது 1000 யூனிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.