
ஜேஇஇ மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் இம்மாதம் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. விண்ணப்பதாரர்களின் கருத்து மதிப்பீட்டிற்குப் பிறகு இறுதி விடைக்குறிப்பு NTA ஆல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான JEE முதன்மை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
NIT, IITல் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக 2 அமர்வுகளாக நடத்தப்படும் இத்தேர்வை 9.4 லட்சம் பேர் எதிர்கொண்டனர். முதன்மை தேர்வை எழுதியவர்களில் 43 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முடிவுகளை jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.