
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் எதார்த்தமாக நடக்கும் சம்பவங்களை பற்றி சொல்லவே வேண்டாம். சிலர் ஏதாவது ஒரு சம்பவத்திற்காக வீடியோ எடுக்க அந்த சமயத்தில் தற்செயலாக ஒன்று நடக்க அது மிகவும் வைரல் ஆகிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் இது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையில் வருந்தத்தக்க ஒரு விஷயம். அதாவது ஒருவர் ரயில்வே நிலையத்தில் நின்று கொண்டிருந்து சட்டை விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.
அவர் வீடியோவில் அந்த சட்டைகளின் தன்மை மற்றும் விலை குறித்து ஒவ்வொன்றாக கூற ரயில் ஒன்று கடந்து சென்றது. அப்போது வாசலில் நின்ற ஒருவர் அவர் கையில் வைத்திருந்த ஒரு சட்டையை பறித்தார். அவர் திரும்பி பார்ப்பதற்குள் மொத்த சட்டையையும் பறித்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த அவர் ரயில் பின்னால் ஓடுகிறார். ஆனாலும் பலன் இல்லை .மேலும் ஒரு சட்டையை விற்பதனால் அவருக்கு எவ்வளவு ரூபாய் பெரிதாக கிடைத்து விடப்போகிறது அப்படி இருக்கையில் இப்படி மனசாட்சியே இல்லாமல் செய்த சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சிலர் இதனை நகைச்சுவையாக கருதி வருகிறார்கள்.
View this post on Instagram