
செங்கல்பட்டு மாவட்டம் மொரப்பாக்கம் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு பாக்ஸ் கொடுக்க திட்டமிடப்பட்டது. இதனால் சிவகாசியில் பட்டாசு கொள்முதல் செய்ய யுவராஜ் மகேந்திரா மேக்சி கேப் வேனை ஓட்டி சென்றுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் யுவராஜை வழிமறித்து மிரட்டி உள்ளனர்.
அவர்கள் யுவராஜை கத்தியால் குத்தி மிரட்டி 10 லட்ச ரூபாய் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவரது தலை, கால், நெஞ்சு ஆகிய பகுதிகளில் காயம் இருந்தது. யுவராஜ் வலியோடு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்குக்கு சென்று நடந்த விபரத்தை கூறினார். அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.