
ஹைதராபாத் அட்டாபூர் பகுதியில் உள்ள பி.வி. நரசிம்மா ராவ் (PVNR) எக்ஸ்பிரஸ்வேயில், குடிபோதையில் இருந்த ஒருவர் பில்லர் எண் 100 அருகே இருந்து தவறி விழும் அதிர்ச்சிகரமான சம்பவம் நேற்று நடந்துள்ளது. அந்த நபர் கம்பியில் தொங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு சென்றவர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட அந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் விழும் தருணத்தில் அருகில் இருந்த கார் அலங்காரக் கடை உரிமையாளர், காரின் உடற்கவசம் (car body cover) ஒன்றை விரைந்து கொண்டு வந்து வீசியதன் மூலம், அவர் பாதுகாப்பாக விழுந்து உயிர் பிழைத்தார். இந்த நுட்பமான செயலால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தப்பிய நபருக்கு எவ்வித பெரும் காயங்களும் ஏற்படவில்லை என்றும், அவரது உயிர் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
A Drunk man narrowly escaped death after falling from the PVNR Expressway at Attapur @TheSiasatDaily #Hyderabad pic.twitter.com/ruiDXkRe3v
— Mohammed Baleegh (@MohammedBaleeg2) April 21, 2025
இந்த சம்பவம் தனிப்பட்டதல்ல என போலீசார் கூறியுள்ளனர். ஹைதராபாத் நகரத்தில் இதற்கு முன்பும் குடிபோதையில் பொதுவழிகளில் தொல்லை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்துள்ளது. இது போன்ற நிகழ்வுகள், மதுவின் விளைவாக ஏற்படும் போது பாதுகாப்பு குறைபாடுகள், பொது மக்களின் வாழ்வில் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகின்றன. குடிபோதையில் பொது இடங்களில் கலவரம் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.