தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா என்னும் பகுதியில் பிரணவ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரம்பரிய வகையில் பல உணவுகளை சமைத்து அவரது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பாரம்பரியமான மயில் கறி சமைப்பது எப்படி என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் அந்த வீடியோவில் மயிலை கொன்று சமைத்துள்ளார். இந்த வீடியோ யூடியூப்பில் மிகவும் வைரலான நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் அந்த விடியோவை தனது யூடியூப் சேனலிருந்து நீக்கியுள்ளார். இருப்பினும் மயில் தேசிய பறவை என்பதால் இவ்வாறு செய்வது குற்றமென விலங்குகள் நல ஆர்வலர்கள் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் பிரணவ் குமார் இதற்கு முன்பே காட்டு பன்றியை கொன்று அதனை சமைத்து தனது யூடியூப் பக்கத்தில் விடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.