இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில் உலகில் முக்கியமான கிரிக்கெட் போட்டிகளில் ஐபிஎல் போட்டியும் ஒன்றாகும். இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் போது ஒரு ரசிகர் பந்தை எடுத்து ஒளித்து வைத்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எந்த மைதானத்தில் எந்த மேட்ச்சின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

அதாவது கிரிக்கெட் வீரர் அடித்த பந்து திடீரென ரசிகர்கள் இருக்கும் இடத்திற்கு வந்த நிலையில் அதனை எடுத்த ஒரு ரசிகர் தன்னுடைய பேண்டுக்குள் அதாவது அந்தரங்க உறுப்பில் பந்தை மறைத்து வைத்துக்கொண்டார். உடனடியாக ஊழியர் வந்து பந்தை கேட்ட போதிலும் அவர் பந்தை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து வந்த போலீஸ்காரர் அதை ரசிகருக்கு அறைவிட்டு பின்னர் பந்தை வாங்கி மைதானத்தில் தூக்கி எறிந்தார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.