பெரும்பாலும் சென்னை போன்ற பெருநகரங்களில் ஓலா,  ஊபர் போன்ற செயலி மூலமாக கார் புக் செய்து அதில் பயணம் செய்திருப்போம் .சில நேரத்தில் புக் செய்த காரை ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் ரத்து செய்து விடுவது வழக்கம். அதேபோல கர்நாடகாவில் ஒருவர் ஓலாவில் டாக்ஸி புக் செய்திருக்கிறார் . சிறிது நேரத்தில் அவருடைய செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில் ஓட்டுநரின் பெயரை பார்த்ததும் அந்த பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார். ஏனெனில் அந்த ஓட்டுனருடைய பெயர் “எமராஜா “.எனவே எமராஜா உங்களுடைய இருப்பிடத்திற்கு வந்திருக்கிறார்… உங்களுக்காக காத்திருக்கிறார்… என்று குறுஞ்செய்தி வந்ததால் அந்த பயணி அதிர்ச்சி அடைந்து டாக்ஸி ரத்து செய்துள்ளார்.