மதுரை மாநகரில் உள்ள உலகனேரி ராஜிவ்காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் (27) என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவரது நெருங்கிய நண்பர் தமிழரசன், லோடுமேனாக வேலை செய்து வருகிறார்.

இருவரும் பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், சில வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு இருவரும் வீட்டின் முன்பு அமர்ந்து மது அருந்தியபோது, பேச்சுவாதம் வாக்குவாதமாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், அருகிலிருந்த கட்டைகளை பயன்படுத்தி இருவரும் தாக்கிக் கொண்டுள்ளனர்.

அதன்பின், தமிழரசன் மது போதையில் நடந்து வீடு சென்று உறங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த மாட்டுத்தாவணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபினேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து கட்டை, ஓடு உள்ளிட்ட ஆதாரங்களை கைப்பற்றி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவரும் தாக்கி கொண்ட காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதை தொடர்ந்து, தமிழரசனின் வீட்டிற்கு சென்ற போலீசார், தூங்கிக்கொண்டிருந்த அவரை எழுப்பி விசாரணை நடத்திய போது, “மதுபோதையில் இருவரும் தாக்கிக்கொண்டோம், நண்பன் இறந்தது எனக்கே தெரியவில்லை” என கூறி கதறியுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.