
நடிகர் சூர்யாவின் தம்பியும, நடிகருமான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்தில் கார்த்தியின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக நிலைப்படுத்திக் கொண்டார் கார்த்தி. நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவருடைய 25வது படமான ஜப்பான் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக 96 பட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் மெய்யழகன் படத்தில் நடித்தார். இப்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே, டாணாகாரன், இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த சூழலில் வா வாத்தியார் படத்தின் டீசரானது நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சத்யராஜ், ப்ரீத்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணி இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் உயிர் பத்திக்காம பாடல் வெளியாகியுள்ளது.