
நம்முடைய இந்தியா தற்போது 6ஜி யுகத்திற்குள் நுழைவதாக பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், நாடு 6ஜிக்கு செல்லப் போகிறது என்று தெளிவுபடுத்தினார். 5ஜி இன் மிக வேகமாக நாடு தழுவிய வெளியீட்டை இது அடைந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
5ஜியின் அடுத்த கட்டமாக 6ஜி நடைமுறைக்கு வந்தால் இது அதிவேக இணையம் என்ற இலக்கை அடைய முடியும் என்றும், தற்போதுள்ள சூப்பர் ஃபாஸ்ட் 5ஜியை விட இன்டர்நெட் 100 மடங்கு வேகமாக இருக்கும் என இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.