
திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் தினமும் தனது மனைவியை அடித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி, தன்னுடைய கணவர் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்ப்பதாகவும், போதையில் தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படியில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இளைஞரை கைது செய்து, அவர் வீட்டில் வளர்த்து வந்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.