இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் இருக்கும் இடத்திலிருந்தே உணவை பெற்றுக் கொள்ளலாம் என்பதால் மிகவும் பயனர்களுக்கு சுலபமாக உள்ளது. ஆனால் உணவகங்களில் உணவுக்கு இருக்கும் விலையை விட ஆன்லைன் ஆப்புகள் மூலம் ஆர்டர் செய்யும் போது அவற்றின் விலை 2 அல்லது 3 மடங்கு அதிகமாகவே இருக்கிறது. இதுகுறித்து அபிஷேக் கோத்தாரி என்ற பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சொமோட்டோ மூலம் உப்புமா ஆர்டர் செய்தால் 120 ரூபாய் ஆகுகிறது.

ஆனால் நேரடியாக உணவுகத்திற்கு சென்று மெனுவில் உள்ள உப்புமாவின் விலையை பார்த்தால் 40 ரூபாய் என்றிருக்கிறது. அதேபோன்று ஆன்லைனில் தட்டு இட்லி 160 க்கும், உணவகங்களில் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றனர். இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பில்லுடன் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து சொமோட்டோ நிறுவனம் அபிஷேக்கிற்கு பதில் அளித்துள்ளது. அதில் அந்த நிறுவனம் கூறியதாவது, எங்கள் ஆப்புகளில் உள்ள உணவின் விலைகள் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மூலமாக  மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர். மேலும் இதற்கு பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.