
வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி நேரு நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர். அந்த தகவலின் படி சத்துவாச்சேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த நிருபன் விஜய், மணிகண்டன், அனீஸ், கௌதம் ஆகியோரை கைது செய்துள்ள நிலையில் விஜயகுமார் என்பவர் தலைமறைவானதால் அவரைத் தேடி வருகிறார்கள். பின்னர் அங்கிருந்த 6 இளம்பெண்களை காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த நிலையில் அவர்களுக்கு 20 முதல் 30 வயதுக்குள் ஆகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.