
சந்திராயன் 3 விண்கலம் வெற்றிக்கு சில படிகள் அருகே உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அதாவது இன்று காலை 8.30 மணிக்கு இஸ்ரோ அடுத்த கட்ட முக்கிய நகரவை மேற்கொள்ள உள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்களுடன் தரையிறங்கும் சந்திராயன் அதன் உந்துவிசை அமைப்பிலிருந்து பிரிந்து நிலவுக்கு அருகில் நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி நிலவுக்கு மிக அருகில் செல்லும் சந்திராயன் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 5.45 மணிக்கு நிலவில் தரை இறங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.