விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக இருந்து அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கியவர் தான் சிவாங்கி. இவர் பிரபல பாடகியான ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரருடைய மனதையும் கொள்ளை கொண்டவர் ஷிவாங்கி. பாடகியாக இருந்த இவர் குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவராகவே மாறி விட்டார்.

இந்த நிலையில் தற்போது இணையதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம். அந்த வகையில், பிரபல மலையாள நடிகரான பேசில் ஜோசப்புடன் வீடியோ கோல் பேசிய புகைப்படத்தை தன்னுடைய ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குவதால், “அடுத்தக்கட்டத்திற்கு நகர்வு..” என்று குறிப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.