தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில், சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் விஜயின் ரசிகர்கள் இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதாவது நடிகர் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை எனவும், அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படமும் விமர்சனகளால் பாதிப்படைந்த நிலையில் அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை எனவும், நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை எனவும் பதிவிட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் நடனமாடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதாவது தி கோட் படத்தில் வரும் மட்ட மட்ட பாடலுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் நடனம் ஆடுவது போன்று எடிட் செய்த அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் அடுத்தவர் துன்பத்தில் தளபதி ரசிகர்கள் என்றும் காண்பதாக கூறுகிறார்கள்.