மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கும் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் என ஏராளமான கடைகள் இருக்கிறது. தீ விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் வணிக வளாகத்தில் இருக்கும் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சிக்கியவர்களை மீட்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. வணிக வளாகத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.