
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் செய்தியாளர்களை சந்தித்த போது நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் விஜய். 200 கோடி சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு தற்போது அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் தனியாக ராஜாங்கம் நடத்தி வரும் நிலையில் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார். அவருக்கு தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வர வேண்டிய அவசியமே கிடையாது. ஆனாலும் 200 கோடி சம்பளம் போன்றவற்றை உதறி தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்றால் கண்டிப்பாக அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வந்துள்ளார். எனவே இப்போதே அவரைப் பற்றி குறை சொல்லி விமர்சிக்க வேண்டாம். அவரை ஊக்கப்படுத்துவோம்.
இந்த ஜனநாயக நாட்டில் இவர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும் அவர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று கிடையாது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். இதற்கு முன்பும் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துவிட்டு பின்வாங்கி விட்டார்கள். இதன் காரணமாக விஜய் மீதும் எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்குது. ஒருவேளை அவரும் பின் வாங்கி விடுவாரோ என்று. ஆனாலும் விஜய் வசூல் மன்னனாக இருந்துவிட்டு தற்போது அரசியலுக்கு வருவதால் கண்டிப்பாக அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறார்.எனவே அவரைப்பற்றி பேசி ஊதி ஊதி அதனை பெரிதாக்காமல் அவருக்கு உறுதுணையாக நிற்போம். கண்டிப்பாக அவர் மக்களுக்கு நல்லது செய்வார். மேலும் இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் என்று கூறினார்.