
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் தற்போது அனைவரும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு ஹீரோவாக இருப்பவர்தான் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 350 கோடி வசூலை குவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் sk23 படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனத்தோடு கூட்டணி சேர்ந்துள்ளாராம்.
அந்த படத்தை பெரிய இயக்குனர் ஒருவர் இயக்கப் போவதாகவும் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். இருப்பினும் அந்த இயக்குனர் யார்? என்பதை அவர் கூறவில்லை. இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும்” என்றும் அவர் கூறியுள்ளார்.