கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த மாதம் 1000 பெற்ற 8,833 பேர் இந்த மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல ஒவ்வொரு மாதமும் புதிய பயனாளிகளை சேர்க்கும் பணியும், தகுதியில்லாதவர்களை நீக்கும் பணியும் தொடர இருக்கிறது. முறைகேடாக ஆவணங்களை காண்பித்து திட்டத்தில் சேர்ந்தோரை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அடுத்த மாதம் மேலும் சிலர் இதிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.