
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு பலரும் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைவருக்கும், இடம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேத் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ரயில்வேத் துறையின் தரம் அடுத்த 5 ஆண்டுகளில் உயர்த்தப்படும் என்றார். இது பிரதமர் மோடியின் உத்தரவாதம் எனவும் அவர் தெரிவித்தார்.