
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரபல தொழிலதிபர் நிக்கோல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளான மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளும் பிரபலங்கள் கலந்து கொண்டு விமர்சையாக நடந்து முடிந்தது.
இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்த நிலையில் நிக்கோல் தன்னுடைய மனைவி வரலட்சுமிக்கு 20 கோடிக்கு சொத்து வாங்கி வைத்துள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வழியாகியுள்ளது. அந்த வகையில் வைரக்கல் பதிக்கப்பட்ட புடவை, தங்க செருப்பு, வைரம் மற்றும் தங்க நகைகள் போன்ற பரிசு மழையால் மனைவியை அசர வைத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.