
உத்தரப்பிரதேசம் ஹாபூர் மாவட்டத்தில் 50 வயதான குடியா என்ற பெண், தனது 14வது குழந்தையை ஆம்புலன்ஸிலேயே பெற்றெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான குடியாவுக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதற்குள் வலிஅதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளர் கர்மவீர் மற்றும் டிரைவர் ஹமேஷ்வர் ஆகியோர் வாகனத்தை நெடுஞ்சாலையோரத்தில் நிறுத்தி, கிடைத்த டெலிவரி கிட் மூலம் குழந்தையை பாதுகாப்பாக பிரசவிக்க உதவினர். குழந்தையும் தாயும் இருவரும் தற்போது நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
हापुड़ में 41 की उम्र 14वें बच्चे को महिला ने दिया जन्म pic.twitter.com/0jUkuySwvf
— crime junction (@crimejunction) March 29, 2025
இந்நிகழ்வுக்குப் பிறகு, தாயுடன் வைத்தியசாலையில் இருந்த அவரது 22 வயதான மகனுடன் எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதேவேளை, Crime Junction என்ற X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் வெளியான மற்றொரு வீடியோவில், குடியா தனது 14வது குழந்தை என கூறப்படுவது தவறு என்றும், தன்னிடம் மொத்தம் 9 குழந்தைகளே உள்ளனர் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
हापुड़ में 41 की उम्र 14वें बच्चे को महिला ने दिया जन्म pic.twitter.com/0jUkuySwvf
— crime junction (@crimejunction) March 29, 2025
“எனக்கு 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உள்ளனர். 2-3 குழந்தைகள் இறந்துவிட்டனர். எனக்கு மொத்தம் 9 பிள்ளைகள் தான்,” என கூறியுள்ளார். ஆனால், குடியாவை சிகிச்சை அளித்த மருத்துவமனைவின் சிஎம்எஸ் டாக்டர் ஹேமலதா, இது குடியாவின் 14வது குழந்தை என்றும், இது ஒரு உட்பிறப்பாக (premature) இருந்தது என்றும் வீடியோவில் உறுதிப்படுத்தியுள்ளார்.