தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று தெலுங்கு டப்பிங்கான வாரசுடு ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு தியேட்டர் உரிமை வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரூ. 16 கோடிக்கு வாரிசு திரைப்படம் தெலுங்கில் வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக பீஸ்டு திரைப்படம் ரூபாய் 11 கோடிக்கு வியாபாரம் ஆனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் 16 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. மேலும் நடிகர் விஜயின் தெலுங்கு தியேட்டர் விநியோக உரிமை முதல் முறையாக அதிக விலைக்கு வியாபாரம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.