இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் டெல்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இந்த சூப்பர் ஓவரின் முதலில் ராஜஸ்தான் விளையாடிய போது 0.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லி அணி 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக 20-வது ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இவர் ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசியுள்ளார். இந்த ஓவரில் 4 வைடுகள், ஒரு நோ பால் என மொத்தம் 11 பந்துகள் அடங்கும். மேலும் இதற்கு முன்பு ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், துஷார் தேஷ் பாண்டே ஆகியோர் இது போன்று வீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.