இந்திய ரயில்வே நிர்வாகம் 2022-23 நிதி ஆண்டில்‌ இதுவரை ரூ. 1,91,162 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஒப்பிடும்போது 40000 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ. 1,48,970 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 1,91,162 கோடியாக அதிகரித்துள்ளது.

அதன் பிறகு மதிப்பீடு காலகட்டத்தில் இந்திய ரயில்வே 1,185 டன் சரக்குகளை கையாண்டுள்ளது. மேலும் இதன் காரணமாக இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 2,35,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.