
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். நடிகர் சூர்யாவுக்கு சென்னையில் பிரமாண்ட வீடு இருக்கும் நிலையில் குழந்தைகளின் படிப்புக்காக தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யா தற்போது கங்குவா என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி மொத்தம் 186 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இவருக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் சூர்யா தன்னுடைய 44வது திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.