பாலிவுட் நடிகை ஊர்வசி ரவூத்தேலா சிங் “சாப் தி கிரேட்” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தமிழில் லெஜண்ட் படத்தில் லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதுமட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிரபல நடிகையாக ஜொலித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் “டாகு மகாராஜ்”.

இந்த படத்தில் ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இந்த படத்தில் பாலகிருஷ்ணாவோடு இவர் தபிடி திபிடி  என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த பாடல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது. இந்த நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த மூன்று நிமிட பாடலுக்கு நடனமாட இவர் மூன்று கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.