கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக சித்தராமையா இருக்கிறார். இந்நிலையில் சித்தராமையாவின் சமூக வலைதள பக்கத்தை பராமரிக்க மாதந்தோறும் 54 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுவதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சித்த ராமையாவின் சமூக வலைதள பக்கங்களை பராமரிக்க கர்நாடக முதல்வர் அலுவலகம் மாதந்தோறும் 54 லட்ச ம் ரூபாய் செலவு செய்கிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

அதன்படி கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் அவருடைய சமூக வலைதள பக்கத்தை பராமரிக்க செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த பாஜக அரசு சமூக வலைதளப் பக்கத்தை பராமரிக்க மாதம் 2 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் ஆனால் தற்போதைய அரசு அதைவிட குறைவாகத்தான் செலவு செய்வதாகவும் அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.