
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் ரசிகர்களால் அன்போடு கிங் கோலி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஐபிஎல் அணியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் விராட் கோலியின் ஜெர்சி ஒன்று தற்போது ரூ.40 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே.எல் ராகுல் மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான அதியா செட்டி தம்பதியினர் கிரிக்கெட் பார் சேரிட்டி ஏலம் மூலமாக நிதி திரட்டி வருகிறார்கள். இவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவி செய்வதற்காக ஏலம் மூலமாக நிதி திரட்டுகிறார்கள்.
இந்த ஏலத்தில் டிராவிட், தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர்களின் ஜெர்சி, பேட் போன்ற பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. அதேபோன்று விராட் கோலியின் ஜெர்ஸி போன்றவைகளும் ஏலத்தில் விற்பனையானது. மேலும் இதில் விராட் கோலி பயன்படுத்திய ஜெர்சி மட்டும் ரூ.40 லட்சத்துக்கு விற்பனையான நிலையில் மொத்தமாக அவர்கள் ரூ.1.9 கோடி நிதியைத் திரட்டியுள்ளனர்.