தமிழகத்தின்  முன்னாள் முதல்வரும், மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 18-ம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் கலைஞர் நினைவு நாணயம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.  அதில் ஒரு நாணயம் ரூபாய் 10 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. இந்நிலையில் திமுக நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் பலர் அதனை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில்  500  நாணயங்கள் விற்பனை ஆகியுள்ளது. அவைகள் சுமார்  50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. வசதியாக இருக்கும் நிர்வாகிகள் விலை எவ்வளவாக இருந்தாலும் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் சாதாரண தொண்டர்களால் இவ்வளவு மதிப்புள்ள நாணயத்தை வாங்க முடியவில்லை. ஆகவே கருணாநிதி நினைவு நாணயத்தை 100 ரூபாய் கொடுத்து வாங்க வழிவகை செய்யுமாறு தொண்டர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.