ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். இவர் ஜூன் 12ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கும் நிலையில் அவருடைய மனைவி நாரா புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ‌ திடீரென உயர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி தன்னுடைய ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தில் 24 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் வைத்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 5 நாட்களில் ரூ.579 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தெலுங்கு தேசம் ஆட்சியைப் பிடிக்கும் என்று வெளியானது தான். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த மே மாதம் 31ஆம் தேதி ரூ.402.90 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.660 வரை உயர்ந்துள்ளது. மேலும் இதனால் நாரா புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு 5 நாட்களில் ரூ.579 கோடி வரை உயர்ந்துள்ளது.