
தமிழ்நாட்டில் இருந்து தெலங்கானா மாநிலம் சென்ற லாரி கூகுள் மேப் வழியை பின்தொடர்ந்து நீரில் மூழ்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. டிரைவரும், கிளீனரும் லாரியில் இருந்துள்ளனர். இவர்களுக்கு சரியான வழி தெரியாததால் Google Mapஐ பயன்படுத்திச் சென்றனர். அண்மையில் பெய்த மழையால் அவர்கள் சென்ற பாதை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அவர்களுக்கு சாலை முழுமையாகத் தெரிவில்லை.
மேலும் google map-யை நம்பி அவர்கள் அதே பாதையில் லாரியில் சென்று கொண்டிருந்தார் கள். இந்நிலையில் அது இரவு நேரம் என்பதால் பாதை தெரியாமல் திடீரென்று லாரியை ஆற்றுக்குள் இறங்கியுள்ளனர். இதனையடுத்து லாரி மூழ்கியதை அறிந்த அவர்கள் இருவரும் கரைக்கு நீந்தி வந்தனர். பின்னர் கிராம மக்கள் லாரியை கயிறு கட்டி வெளியே இழுத்தனர்.