
பேட் நியூஸ் என்னும் படத்தில் இடம்பெற்றுள்ள தௌபா… தௌபா… என்னும் பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்த பாடலுக்கு பஞ்சாபி பாடகரான கரண் அவுஜ்லா என்பவர் இசையமைத்துள்ளார். இந்த பாடலுக்கு விக்கி கவுஷல், கரண் மற்றும் ட்ரிப்தி டிம்ரி ஆகியோர் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் நடனமாடியுள்ளனர். இந்நிலையில் இந்த பாடலானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் பாடலுக்கு நடனமாடி மகிழ்ச்சி அடைகின்றனர்.
மேலும் சிலர் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்துவருகின்றனர். அந்த வகையில் ஒரு பெண் இரண்டு சிறுவர்களுடன் வீட்டின் முன்பு நின்று இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளிட்டுள்ளார். இந்த விடியோவை பார்த்த நடிகர் விக்கி கவுஷல் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் பலரும் அந்த விடியோவுக்கு லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.
View this post on Instagram