டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருது பெற்ற வீரர் வீராங்கனைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் வருகை புரிந்தார். அப்போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாய்னா நேவால் உடன் சேர்ந்து பேட்மிட்டன் விளையாடினார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை கூறியதாவது, உலக அளவில் பெண் வீராங்கனைகள் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். பேட்மிட்டன் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக குடியரசு தலைவரின் செயல் அமையும் என்று கூறியுள்ளனர். மேலும் குடியரசு தலைவர் பேட்மிட்டன் விளையாடுவதை பார்க்கும் போது அவர் இயற்கையாகவே அந்த விளையாட்டின் மீது பற்று கொண்டவர் என்பது தெரிய வருகிறது.