திகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக் குழுவின்படி 4% சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தற்போது அவர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது. அது இந்த மாத இறுதியிலேயே 46 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஜூலை 1ஆம் தேதி முதல் சம்பள உயர்வு கணக்கிடப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் இதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.