
இயற்கையாகவோ அல்லது விபத்துக்கள் மூலமாகவோ தங்களுடைய உடல் உறுப்புகளை இழந்தவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக மீண்டும் உயிர் வாழ்வதற்கான பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இப்படி கடந்த 15 வருடங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து விட்டது .விபத்தில் மூளைச்சவடைந்தவர்கள், இறந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக உடலில் கல்லீரல் , கணையம் போன்றவற்றை தானம் செய்யும் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உடல் உறுப்பு தானம் செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு 42 நாள்கள் சிறப்பு விடுப்பு அளிக்க இந்தியன் ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்துடன் ஆலோசித்து வருவதாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறைத் தெரிவித்திருந்த நிலையில், ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், பரிந்துரையின்படி உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களின் பொதுநலன் கருதி விடுப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.