ஐசிசி 9-வது டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதற்கு முன்பு கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு தற்போது டி20 உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது.

இதேபோன்று வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சீசனில் கோப்பையை வென்றது. அவருடைய தலைமையில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடிய நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை என இரண்டு போட்டிகளிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. மேலும் இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக பங்கேற்றவர்கள் என்ற தனித்துவ சாதனையை ரோகித் சர்மா மற்றும் வில்லியம்சன் படைத்துள்ளனர்.