நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நிலையில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்த போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

அதாவது நேற்று நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மா அடித்த சிக்சர்களுடன் சேர்த்து மொத்தமாக அவர் விளையாடிய அனைத்து டி20 போட்டிகளிலும் 203 சிக்ஸர்கள் எடுத்துள்ளார். அவர் மொத்தம் 157 ஆட்டங்களில் விளையாடி 203 சிக்சர்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல்வீரர் என்ற பெருமையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.