
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய ஊழியர்களுக்கு பண்டிகைகளுக்கு முன்பு அரசு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது நடந்தால், அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும். மக்களவைத் தேர்தல் 2024-ல் நடைபெற உள்ளதால் 2026-ம் ஆண்டு முதல் இதை அமல்படுத்தலாம் என கூறப்படுகிறது.
ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதனால் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,000 வரை உயர்த்தப்படும். இதன் மூலம் 52 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.