
பிரபல நடிகரான விஜய் தனது 69-ஆவது படமான ஜனநாயகன் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே விஜயின் சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சச்சின் திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சச்சின் திரைப்படம் ரீ- ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த நிலையில் ப்ரீ புக்கிங்கில் மட்டும் சச்சின் திரைப்படம் 1.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.