தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் காஞ்சனா படங்களை இயக்கி நடித்ததன் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் சிறந்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். இப்படி பன்முக திறமைகள் கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா 4 திரைப்படம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார். அதோடு காஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது அவர் காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க முடிவு  எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.