மழை, வெயில் என இரண்டுமே இயற்கை நமக்கு அள்ளித்தந்த  கொடைகள்,. எனவே இவை இரண்டுமே மிக மிக நம் வாழ்க்கையில் முக்கியமானவையாக கருதப்படுகின்றது. மழை பெய்யாவிட்டாலும் பிரச்சினை தான். வெயில் இல்லாவிட்டாலும் பிரச்சினை தான். இவை இரண்டுமே வாழ்வில் இன்றியமையாதவை. இருப்பினும் ஒரு ஊரில் மழையே பெய்யாது என்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

ஆம் . ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹுதீப் என்ற கிராமம் உள்ளது. தரை மட்டத்தில் இருந்து சுமார் 3,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் எப்போதும் வறட்சியுடன்தான் காணப்படுகிறது. இப்பகுதியில் போதுமான நீர் ஆதாரங்கள் இல்லாததும், மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளதாலும் மழை பெய்வதில்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக, சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் மேகங்கள் குவியும்